2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

உலகின் 2வது அதிக வயதான பெண் மரணம்

Mithuna   / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக ஆயுட்காலம் வாழ்ந்த மிக வயதான மனிதர்களில் பல நபர்களின் தாயகமாக ஜப்பான் உள்ளது. உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா டாட்சுமி தனது 116 வயதில் காஷிவாராவில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார்.

ஃபுசா டாட்சுமி என்ற அந்த மூதாட்டி, செவ்வாய்கிழமை (12), அவருக்குப் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு, பராமரிப்பு நிலையத்திலேயே மரணமடைந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர், “டாட்சுமி தனது 116வது வயதில் டிசம்பர் 12 ஆம் திகதி இறந்தார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் பல தொற்றுநோய்களின் இடையே வாழ்ந்த டாட்சுமி, கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக அங்கீகரிக்கப்பட்டார்.

1907-இல் பிறந்த டாட்சுமி, ஒசாகாவில் ஒரு விவசாயியான தனது கணவருடன் மூன்று குழந்தைகளை வளர்த்தார். அவர் சமீபத்தில் தனது பெரும்பாலான நாட்களை முதியோர் இல்லத்தின் படுக்கையில் கழித்தார்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .