2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உயிரை மாய்த்தது ரோபோ

Janu   / 2024 ஜூலை 03 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் தென் கொரியாவில் பதிவாகியுள்ளது .

தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த, ரோபோவின் உடல் , கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே கிடந்ததாகவும், படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்றுள்ளதாகவும் குமி நகர அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர்.

குறித்த ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் , விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள், ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது .

மேலும் நகரவாசிகள் இந்த விபத்தை தற்கொலை என்று கூறுவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .