Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 29 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகரித்து வரும் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்கும் முயற்சியில், சீனா பாடசாலைகளில் உடற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதன்படி சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாட ஆசிரியர்களைப் போலவே உயர்பயிற்சி ஆசிரியர்களும் நடத்தப்படுவதை தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், கால்பந்து, கூடைப்பந்து , கைப்பந்து போன்ற முக்கிய விளையாட்டுகளில் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், முழுமையான கல்விக்கான அணுகுமுறையில் உடற்பயிற்சிக் கல்வியும் அடங்கும்.
ஏட்டுக்கல்வியுடன் உடல் உறுதியையும் ஒருங்கிணைப்பது மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவி, அவர்களை எதிர்காலத்திற்காக தயாராக வளர்க்கும் என்றும் அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவை 2035ஆம் ஆண்டுக்குள் சிறந்த கல்வியறிவு பெற்ற நாடாக உருவாக்குவதற்கான தனது முதல் தேசிய திட்டத்தை அந்நாடு ஜனவரி மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிட்டப்பார்வை (மையோபியா), உடற்பருமன் விகிதங்களைக் கட்டுப்படுத்த,தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அன்றாடம் குறைந்தது இரண்டு மணி நேரக் கட்டாய உடற்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் அத்திட்டத்தில் அடங்கும்.
நாடு தழுவிய அளவில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதைத் தொடர்ந்து, குறிப்பாக கிராமப்புறங்களில், இந்த இடைவெளியைக் குறைக்க ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை பணியமர்த்துவதை கல்வி அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. இந்த பதவிகளின் ஈர்ப்பை அதிகரிக்க உடற்கல்வி ஊழியர்களுக்கு சம ஊதியம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தொற்றுநோயால் தூண்டப்பட்ட செயலற்ற தன்மை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் 2019 முதல் குழந்தை பருவ உடல் பருமன் அதிகரித்து வருகிறது. சீனாவின் பொருளாதார சவால்களுடன் உடல் பருமன் விகிதங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த கல்வி சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவையை நாட்டின் சுகாதார அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago