2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

“ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது”

Mithuna   / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு விசாரணை முடிந்து திங்கட்கிழமை (11) சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக பிரதமர் மோடி “சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

இந்த தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .