Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேவைப்பட்டால் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவூதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட நிலையில், ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,
"தேவைப்பட்டால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி புதின் கூறியுள்ளார்" என்றார்.
முன்னதாக, “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும்போது, "ஒரு இறையான்மை கொண்ட நாடாக, நாங்கள் பங்கு பெறாத பேச்சுவார்தையில் எட்டப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. புடின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனிதனியாக தொலைப்பேசியில் உரையாடல் நடத்தியுள்ளார்.
அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தை:
இந்தப் பின்னணியில் சவூதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரினை நிறுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை (18) பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோவை சந்தித்தார். உக்ரைன் மற்றும் ஐரோப்பா இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago