Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் ஏவிய, 150 ட்ரோன்களை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும், 'நேட்டோ' அமைப்பில் சேரும் முடிவை எதிர்த்து உக்ரைன் மீது கடந்த 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரஷ்யா மீதான வான்வழி தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மொஸ்கோ உட்பட 15 நகரங்களை குறிவைத்து வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை உக்ரைன் ஏவியது.
நிலக்கரி உற்பத்தி நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ரஷ்யா முறியடித்தது.
காஷிரா நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீது பறந்த மூன்று ட்ரோன்களை அந்நாட்டு இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
மேலும், மொஸ்கோ, கிம்கி, டாவிடோஸ்கோவ் உள்ளிட்ட நகரங்களில் பறந்த 150 ட்ரோன்கள், ரஷ்ய படையால் வீழ்த்தப்பட்டன. ட்ரோன்கள் உக்ரைனின் எல்லை நகரங்களான குர்ஸ்க், பிரயான்ஸ்க், வொரேனெஷ், பெல்கோரோ பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், உக்ரைன் தாக்குதலால் பெல்கோரோட் பகுதியில் மூன்று குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .