2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஈரான் சுரங்கத்தில் வெடி விபத்து: 50 பேர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் தெற்கு கொராசன் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் எரிவாயு வெடித்து நடந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

விபத்து நடந்த பகுதியில் இயங்கி வரும் மாதன்ஜோ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தில் உள்ள 'பி' மற்றும் 'சி' பிளாக்குகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து குறித்து தெற்கு கொராசன் பிராந்தியத்தின் கவர்னர் அலி அக்பர் ரஹிமி கூறுகையில், "நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி பயன்பாட்டில் 76 சதவீதம் இந்தப்பகுதியில் இருந்தே பெறப்படுகிறது. இங்கு மதான்ஜு நிறுவனம் உட்பட 8 முதல் 10 பெரிய நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.

பி பிளாக்கில் மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. அங்கு பணியில் இருந்த 47 பணியாளர்களில் 30 பேர் உயிரிழந்து விட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். சி பிளாக்கில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மீத்தேன் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் மீட்புப் பணிகள் நிறைவடைவதற்கு அதிக நேரம் எடுக்கும்" என்று தெரிவித்தார். விபத்து நடப்பதற்கு முன்பு அங்கு 69 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X