2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஈரானை எதிர்க்க உதவியை நாடும் இஸ்ரேல்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகின்ற நிலையில், நட்பு நாடான அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. இக்கொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லாண்ட் கூறுகையில், “அமெரிக்க அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜான் ஹ_லே உடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, பாதுகாப்பு சூழ்நிலை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த இரு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவோம்” என்று அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த முறை தாக்குதல் கடுமையாக இருக்கும் என தெரிகிறது.

அதேநேரத்தில் கடந்த வாரம் அமெரிக்க அமைச்சர் ஆஸ்டின் லாயிட் கூறுகையில், “இஸ்ரேல் தாக்கப்பட்டால், நிச்சயம் அந்நாட்டிற்கு உதவுவோம். பிரிட்டனுடனும் ஆலோசனை நடத்தி உள்ளோம்” என்றார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .