2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஈரானில் கடும் வெப்ப அலையால் வெளியே வர தடை

Freelancer   / 2024 ஜூலை 28 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மாலை 5 மணி வரை வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிய நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொது துறை நிறுவனங்களின் அலுவலக நேரம் நேற்று பாதியாக குறைக்கப்பட்டது.

மேலும், கடுமையான வெப்பத்தில் இருந்து மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆற்றலை சேமிக்கவும் நாடு முழுவதும் வங்கிகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மாலை 5 மணி வரை பொது வெளியில் நடமாட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்ப அலை காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் கடந்த செவ்வாய் கிழமையன்று மின்நுகர்வு 78,106 மெகாவாட் என்ற சாதனை அளவை எட்டியதாகவும் ஈரான் செய்தி நிறுவனம் இர்னா தெரிவித்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .