2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 28 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் சுமார் 46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (24) நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல், தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலும் பலஸ்தீனர்களை விடுதலை செய்து வருகின்றனர். இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை (28) காலை 10.30 மணியுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தும் முடிவடைந்தது.

போர் நிறுத்தம் முடிவடைந்ததும், தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். இதனால் எகிப்து, கத்தார், அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இந்த நிலையில் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .