2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனர்கள் 100 பேர் பரிதாப பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 100 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 'ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் தொடரும்' என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், இன்று (10) கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 100 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை தெரிந்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது என ஹமாஸ் படையினர் குற்றம்சாட்டினர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .