Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 14 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் வருகிற திங்கட்கிழமை (20) ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். அதற்கு முன் வருகிற பேச்சுவார்த்தை வெற்றியடைந்து, இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர். இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என, இஸ்ரேலால் நம்பப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், "வருகிற 20ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
46 minute ago
50 minute ago