Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், பலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் இராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்' அமைப்பினர் போரிட்டு வருகின்றனர்.
பலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், 70 ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் இராணுவ அமைச்சரவை கூட்டம் நடந்தது. அடுத்து 48 மணி நேரத்திற்கு இராணுவ அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. லெபனான் நாட்டில் இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசாவில் நடத்தியதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி விட்டது தெரியவந்துள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
52 minute ago
55 minute ago
1 hours ago