2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

இரு வேறு துப்பாக்கிசூட்டில் எழுவர் உயிரிழப்பு : இருவர் காயம்

Freelancer   / 2024 நவம்பர் 07 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் - கைபர் பக்துன்குவா மாகாணத்தில், இரு வேறு துப்பாக்கிசூட்டு சம்பவங்களில், 7 பேர் உயிரிழந்ததுடன்,. பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். 

 பத்கேலா நகரம் - பகதூராபாத் பகுதியில், 2 குழுக்கள் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுட்டு கொண்டனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார். 

இதேவேளை, குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில், லோயர் குர்ராம் , டேட் குமார்  பகுதியில், பஸ் மீது  மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். 

இதில் 2 பேர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .