2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த அதிசயக் குழந்தைகள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்களுக்கு இரட்டையர்களாக குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
இரட்டை சகோதரிகளான பிரிட்டனி, ப்ரியான டீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்களான ஜோஸ் மற்றும் ஜெரமி சால்யெர்ஸை கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற இரட்டையர்கள் திருவிழாவில் சந்தித்துள்ளனர்.
நாளடைவில் 35 வயதான சால்யர்ஸ் சகோதரர்கள் 33 வயதான டீன் சகோதரிகளை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் அந்த சகோதரிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரே நேரத்தில் பிரசவித்துள்ளனர். 
 
இந்த சூழலில் 2021 பிப்ரவரி மாதத்தில் ஜெரமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஜோஷ்க்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்களாக இருப்பார்களா என எதிர்பார்த்து இருந்த அந்த தம்பதிகளுக்கு அவர்கள் நினைத்தது போலவே நடைபெற்றுள்ளது. 
 
அந்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். 
இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X