Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 28 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலம்பியாவில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதனால் வீதியோரங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு கொலம்பியாவில் எம்பெரா பழங்குடியினத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பாடசாலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுமியை தேடி பெற்றோர் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி நடப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.
இதனை கண்ட பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்து சென்ற போது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் பெற்றோரால் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவருவதாவது: 7 இராணுவ வீரர்கள் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இதனடிப்படையில் குறித்த இராணுவ வீரர்கள் 7 பேருக்கும் 30 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
25 Apr 2025