Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி கடற்கறையில் கரை ஒதுங்கிய உயிரினமொன்று மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடற்கரைக்கு விக்கி ஹேன்சன் என்ற நபர் தனது நாயுடன் காற்று வாங்கச் சென்றுள்ள நிலையிலேயே மணலில் விசித்திரமாக உயிரினமொன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர்,"மணலில் நீளமாக கிடந்த அந்த உயிரினத்தின் மீது பல வண்ண கலவைகளால் ஆன, இறக்கைகள் போன்ற அமைப்பு இருந்தது. அவை அசைந்து கொண்டிருந்தன. அந்த உயிரினத்தின் இன்னொரு பாதி கடலிலேயே துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என எண்ணினேன். நான் இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை. யாரும் இப்படி ஒரு விநோதத்தைப் பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை" என்றார்.
எனினும் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு விக்கி சென்றபோது எந்த அசைவுகளும் இன்றி அந்த உயிரினம் காணப்பட்டதாகவும், இதனால் அது உயிரிழந்திருக்கலாம் எனக் கருதியதாகக் கூறியுள்ளார் .
இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி பல்வேறு வகையான விவாதங்களை எழுப்பியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago