2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

இந்தியாவில் அணு உலைகளை அமைப்பதற்கு ட்ரம்ப் அனுமதி

Freelancer   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், அணு உலைகளை அமைப்பதற்கு, ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு ட்ரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா-அமெரிக்காவுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் இணைந்து இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர்.

ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பின்பு நடைமுறைக்குவரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் அணு உலைகளை அமைப்பதற்கு ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு ட்ரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது என்று, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .