2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

இங்கிலாந்தில் ஜெய்சங்கருக்கு எதிராக போராட்டம்

Freelancer   / 2025 மார்ச் 06 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகையை தொடர்ந்து, இங்கிலாந்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இலண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்து கொண்டார். அப்போது அந்த கட்டிடத்துக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். திடீரென்று ஒரு நபர், ஜெய்சங்கரின் காரை நோக்கி ஓடினார். அவர் தனது கையில் தேசிய கொடியை வைத்திருந்தார்.

 

கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி தேசிய கொடியை கிழித்தார். உடனே அந்த நபரை பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் ஜெய்சங்கர் காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

ஜெய்சங்கரின் கார் மறிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .