2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஆமைகளை உண்டு 95 நாள்கள் தத்தளித்த மீனவர் மீட்பு

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 17 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


பசுபிக் சமுத்திரத்தில் தொலைந்து போய் ஆமைகள், பறவைகள், கரப்பான்பூச்சிகளை உட்கொண்டு 95 நாள்கள் தப்பித்த பெரு மீனவரொருவர் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டு வார மீன்பிடிக்காக தென் பெரு கடற்கரை நகரான மார்கொனாவிலிருந்து 2024ஆம் ஆண்டு டிசெம்பர் ஏழாம் திகதி 61 வயதான மக்ஸிமோ நபா கஸ்ட்ரோ புறப்பட்டுள்ளார்.
10 நாள்களின் பின்னர் புயலொன்றால் அவரது படகின் திசை மாறி அவர் தத்தளித்து விநியோகமின்றி இருந்துள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமையே (12) ஈக்குவடோரின் கண்காணிப்புப் கப்பலொன்று கரையிலிருந்து 1,094 கிலோ மீற்றர் தொலைவில் மோசமான நிலையில் கஸ்ட்ரோவைக் கண்டுபிடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X