Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர் கொண்டு அசையும் எந்தவொரு புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு, ஆப்கானிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில், இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வது வரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.
குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த பின்னர், தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
இதன் மேற்பார்வையிலேயே, மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்தவொரு புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயற்படுத்த தொடங்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயற்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025