Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 09, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 08 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ந் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களை முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வெற்றி பெற்று, வருகிற 20-ந் திகதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார். டிரம்ப், 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றினார்.
இதனிடையே, டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் டொனால்டு டிரம்ப் ஹோட்டலில் வைத்து தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக ஸ்டோமி டேனியல்ஸ் தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.
அதேவேளை, 2016-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, தன்னுடனான பாலியல் உறவு விவகாரம் பற்றி வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டேனியல்ஸ் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார நிதியாக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் போலியான வணிக பதிவுகளை உருவாக்கி, பின்னர் தனது முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோமி டேனியல்சுக்கு அந்த பணத்தில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டிரம்ப் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில், பணமோசடி உள்பட 34 பிரிவுகளில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என மேன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இந்த வாரம் தண்டனை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அறிவிப்பை தள்ளி வைக்கும்படி கோரி, டிரம்ப் சார்பில் நியூயோர்க் நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், டிரம்ப்பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வருகிற வெள்ளிக்கிழமை தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப்பின் வழக்கறிஞர்களின் வாதங்களை இணை நீதிபதி எல்லன் கெஸ்மர் நிராகரித்து உள்ளார்.
ஜனவரி 20-ந் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பு பரபரப்பாக பார்க்கப்படுகிறது. எனினும், கெஸ்மரின் இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிமன்ற அமர்வு மற்றும் சுப்ரீம் நீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு செய்ய முடியும்.
இந்த சூழலில், வெள்ளிக்கிழமை தண்டனை விவரம் தீர்ப்புக்காக நேரிலோ அல்லது காணொலி காட்சி வழியாகவோ, இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வழக்கில் டிரம்ப் ஆஜராகலாம் என நீதிபதி ஜுவான் மெர்சன் கூறியுள்ளார். ஆனால், நீதிபதி மெர்சனை டிரம்ப் நேற்று(07) கடுமையாக சாடினார். மெர்சன் ஒரு நேர்மையற்ற நீதிபதி என பத்திரிகையாளர் சந்திப்பின்போது, டிரம்ப் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago