2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஆசாத் ஆட்சி சரிவு:பைடன் புகழ்ச்சி

Freelancer   / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆசாத் ஆட்சியின் சரிவை, அமெரிக்க ஜனாதிபதி பைடன் புகழ்ந்துள்ளார்

“சிரியா மக்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த வரலாற்று சந்தர்ப்பத்திற்கான தருணம் இதுவாகும்” என,  பைடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பைடன் கூறும்போது,

“ 13 ஆண்டு கால உள்நாட்டு போருக்கு பின்னர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத், அவருக்கு முன்னர் அவருடைய தந்தை ஆகியோரின் கொடூர ஆட்சி முறை சூழலில், கிளர்ச்சி படையினர் வலுகட்டாயப்படுத்தி, பதவியில் இருந்து ஆசாத் வெளியேறும்படி செய்ததுடன் அவரை நாட்டில் இருந்தே தப்பியோடும்படி செய்து விட்டனர்” என கூறியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு பின்னர், ஆசாத் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. லட்சக்கணக்கான அப்பாவி சிரிய மக்களை சித்ரவதை செய்து, கொடூர வகையில் கொலை செய்தது இந்த ஆட்சி என்றும், பைடன் கூறியுள்ளார்.

எனினும், இதனால் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆபத்து ஆகியவையும் ஏற்பட்டுள்ளது என பைடன் ஒப்புகொண்டிருக்கிறார். 

சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் சிரியாவின் நலம்விரும்பிகளுடன் இணைந்து செயற்படும் என்றும் பைடன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .