2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்படும் அபாயம்

Freelancer   / 2025 ஜனவரி 16 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்கர் ஜென்கின்ஸ் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்புடன் இணைவதாக கூறிய உக்ரைன் மீது ரஷ்யா இராணுவம் போர் தாக்குதலை 2022ஆம் ஆண்டு தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இருப்பினும் போர் தீவிரம் குறைந்தபாடில்லை.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆஸ்கர் ஜென்கின்ஸ் (வயது 32), உக்ரைன் இராணுவத்தில் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக அங்கு போராடி வந்தார். போரில் ரஷ்யா இராணுவத்தினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது ஆஸ்கர் ஜென்கின்ஸ் இறந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான ரஷ்யா தூதருக்கு அவுஸ்திரேலியா பிரதமர் அலுவலகம் சம்மன் அனுப்பியது. நேரில் ஆஜரான ரஷ்ய தூதரிடம், பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது ஆஸ்கர் ஜென்கின்சின் நிலவரம் குறித்து ஆதாரங்களுடன் கேட்கப்பட்டது. அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் ரஷ்யா தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X