Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 28 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் புகலிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"அது (காசா) இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.
“அதை(காசாவை) நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்" என்று டிரம்ப் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.
இதனிடையே, ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தங்களின்படி 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
காசா மீதான போரில், இஸ்ரேல் கட்டுப்பாடுகளை மீறியதால், முன்னாள் அதிபர் ஜோ பைடன் இந்த வெடிகுண்டுகளை அனுப்பாமல் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிற பாலஸ்தீனிய நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தனியாக உள்ள காசாவை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
7 hours ago
8 hours ago
06 Apr 2025