2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அமெரிக்காவில் சூறாவளிக்கு 18 பேர் பலி

Freelancer   / 2024 மே 28 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெக்சாஸ், ஒக்லாஹோமா, ஆர்கான்சாஸ் மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை இரவு பயங்கர சூறாவளி தாக்கிய நிலையில், தொடர் மழை மற்றும் சூறாவளி காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், பொதுமக்கள் மழை மற்றும் சூறாவளியில் சிக்கி தவித்ததோடு, பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை வெள்ளம் மற்றும் சூறாவளி பாதிப்பினால் 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், டெக்சாசில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரை கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், காணவில்லை என கூறப்படுகின்றது. அதேசமயம், சுமார் 100 பேர் சூறாவளியின் காரணமாக காயமடைந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்ததுள்ளன.

அதேசமயம், பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 இலட்சத்து 70 ஆயிரம் பேர் மின்விநியோகம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .