Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் நிகழ்ந்த கோரமான கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அர்கான்சாஸ் நோக்கி கார் ஒன்றில் தர்ஷினி வாசுதேவன், ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகிய 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் தர்ஷினி வாசுதேவன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
காலின்ஸ் கவுண்டி என்ற பகுதியில் அவர்கள் பயணித்த கார் வந்து கொண்டிருந்த போது அசுர வேகத்தில் வந்த லொரி மோதியது. லொரி மோதிய வேகத்தில் 4 பேரும் இருந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
அப்போது அடுத்தடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த 4 வாகனங்கள் கார் மீது மோத, தீப்பிடித்தது. மளமளவென கார் முழுவதும் தீ பரவியதால் உள்ளே 4 பேரும் சிக்கிக் கொண்டனர்.
வெளியே வர எவ்வளவோ முயற்சித்தும் முடியாததால் உள்ளேயே மூச்சுத் திணறி 4 பேரும் பலியாகினர். பொலிஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். காரில் இருந்த 4 பேரும் ஒருவரை ஒருவர் முன்பின் அறியாதவர்கள் என்பது தெரிய வந்தது.
4 பேரும் கைபேசி செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றபோது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செயலி மூலம் மேலும் பல தரவுகளை சேகரிக்கும்போது தான், பிரிஸ்கோ பகுதியில் தங்கியிருந்தபடி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தர்ஷினி வாசுதேவன் உயர்கல்வி பயின்று வந்ததும், உறவினர் ஒருவரைக் காண காரில் சென்றதும் தெரியவந்தது.
இதேபோன்று தான், லோகேஷ் பலசார்லா மனைவியைச் சந்திக்க பென்டன்விலுக்கும், ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டெல்லாசில் உள்ள தமது உறவினரை பார்த்துவிட்டு நண்பர் ஷேக் என்பவருடன் திரும்பிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
4 பேரின் உடல்களை கைப்பற்றிய பொலிஸார், மரபணு சோதனை முடிவுகள் படி அடையாளம் காணப்பட்டு உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .