Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 07 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க தேர்தல் முடிவுகள் தங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என, ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில்,
“அடுத்த அமெரிக்க ஜனாதிபதி, அவர் யாராக இருந்தாலும், சொந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதும், அமெரிக்க கடற்கரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சாகசங்களைத் தேடாமல் இருப்பதும் தர்க்கரீதியானதாக இருக்கும்.
“அமெரிக்கக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எங்களுக்கு ஏதேனும் முன்மொழிவுகள் தோன்றினாலும், ரஷியாவின் நலன்களுடன் பொருந்தக்கூடிய வகையில் அவற்றை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக இருப்போம்.
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பாக தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரஷியா தனது நலன்களை உறுதியாக பாதுகாக்கும். ஜனநாயக நெருக்கடி மற்றும் சமூகத்தின் பிளவு ஆகியவற்றை அமெரிக்கா கடந்து வர வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
இதுதொடர்பாக ரஷ்யாவின் அரசு செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில்,
"அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷ்யா தயாராகவே உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம்.
ஜனவரியில் டிரம்ப் ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago