Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 20 , பி.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவி ஏற்றார். அதன்படி, கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதற்காக, டிரம்ப் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நேற்று முன்தினம் சென்றார். பிறகு, புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வொஷிங்டனுக்கு தனி விமானம் மூலம் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago