2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

அன்னதான நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி , அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவில், கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலட்சக்கணக்கானோர் அங்கு பட்டினியில் சிக்கி தவிக்கின்றனர். 

இந்நிலையில், அனம்ப்ரா மாகாணம் - ஒகிஜா நகரில், ஞாயிற்றுக்கிழமை (22), கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. 

இதனை பெறுவதற்காக ஏராளமானோர் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், அண்மையில், தலைநகர் அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது பரிசுகளை பெற மக்கள் போட்டிப்போட்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறுவர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X