2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

’அனைத்து நாடுகளுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்படும்’

Freelancer   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​கும​திக்​கும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் ஜனாதிபதியாக 2 ஆவது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தங்​கள் நாட்​டின் பொருட்​களுக்கு இந்​தியா உள்ளிட்ட பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு பதிலடி​யாக, அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பிற நாடு​களின் பொருட்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவுக்கு நாளை முதல் வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். இதையடுத்​து, இது தொடர்​பாக உலக நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன.

இதனிடையே, ட்ரம்​பின் கூடு​தல் வரி விதிப்​பால் நியாயமற்ற வகை​யில் அமெரிக்க பொருட்​களுக்கு அதிக வரி விதிக்​கும் 10 முதல் 15 நாடு​களுக்கு மட்​டுமே பாதிப்பு ஏற்​படும் என தகவல் வெளி​யாகி இருந்​தது. 

இந்​நிலை​யில், ஜனாதிபதி ட்ரம்ப் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும். என்ன நடக்​கிறது என்று பார்ப்​போம்” என்​றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .