Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு முடிவுக்கு இடையே, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஆகியன அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்துள்ளன என செய்தி வெளியான சூழலில், இஸ்ரேலும் வரி இரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இது பற்றி வெளியான செய்தியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நிதி மந்திரி பிஜாலெல் ஸ்மோத்ரிச் மற்றும் பொருளாதார மற்றும் தொழில் துறை மந்திரியான நிர் பர்கத் உத்தரவின்பேரில் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளும் இரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கான நிதி குழு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ள இஸ்ரேல், அதன் முக்கிய வர்த்தக நட்புறவு நாடாகவும் உள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 1,730 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இதேபோன்று, சேவை ஏற்றுமதி 1670 கோடி அமெரிக்க டொலராக இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
7 hours ago