2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அதானி குழுமத்திற்கு எதிர்ப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யா - நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்குக் குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 
 
தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஒப்பந்தத்திற்குக் கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ருட்டோ ஆதரவு தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில், விமான நிலையத்தை அதானி குழுமத்திற்குக் குத்தகைக்கு விடும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X