2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

“அதிகம் காதல் செய்யுங்கள்” மக்களிடம் வேண்டும் புடின்

Freelancer   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யும்படி ரஷ்ய மக்களுக்கு ஜனாதிபதி புடின் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகள், இராணுவம் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் ரஷ்யா கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ரஷ்யா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது.

அந்நாட்டு ஜனாதிபதி புடின், நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல.

இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .