2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அணை உடைந்ததில் 30 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை உடைந்து விபத்து ஏற்பட்டதில், 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை என  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு சூடானில் கனமழை காரணமாக அர்பாத் அணை உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலரை காணவில்லை என்பதோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 50,000 பேர் வீடின்றி தவித்து வருகின்றனர்.

மீட்டுப்பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .