2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அணு ஆயுதங்களை பயன்​படுத்த புட்டின் அனுமதி

Freelancer   / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த,  ரஷ்ய அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்​துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில், புட்டின், செவ்வாய்க்கிழமை (19) கையெழுத்​திட்​டுள்​ளார்.

ரஷ்யா மீது தாக்​குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் இராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்​குகளை துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது. எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்​படுத்த கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருந்தன.

தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்​காலம் முடிவடைய உள்ள நிலை​யில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளை பயன்​படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்​கி​யுள்​ளார். 

இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்​படுத்​தும்​ பட்​சத்​தில், ரஷ்யா​வுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்த சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த ரஷ்யா முடிவு செய்​துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X