2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

அங்கோலாவில் கொலரா தொற்று:12 பேர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில், கொலரா தொற்றுக்குள்ளாகி, 12 பேர் உயிரிழந்துள்ளதாக,  அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கோலா நாட்டில் கொலரா தொற்று பரவி வருகிறது. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை (7), முதன்முறையாக தொற்று பதிவு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்தடுத்து தொற்று பரவி 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நடந்த பரிசோதனையில், 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 12 இலட்சம் பேர் வசிக்க கூடிய லுவாண்டா மாகாணத்தில் ககுவாகோ புறநகர் பகுதியில், கொலரா தொற்று பரவி வருகிறது. 

இந்நிலையில், கொலரா தொற்றுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X