2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 24 பேர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கவிழ்ந்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

 சோமாலியா நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். 

இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 70 பேர், ஞாயிற்றுக்கிழமை (24),  2 படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு  பயணத்தை மேற்கொண்டனர்.

இதன்போது 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X