2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

TIK TOK இல் களமிறங்கிய டொனால்ட் ட்ரம்ப்

Janu   / 2024 ஜூன் 04 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் குடியரசு கட்சி தலைவரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் சீன செயலியான TIK TOK இல் ட்ரம்ப் புதிய கணக்கு துவங்கினார். அவரை TIK TOK இல் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி TIK TOK செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

இந்தநிலையில் தற்போது அவரே TIK TOK இல் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரசார உத்திக்காக TIK TOK இல் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

https://shorturl.at/1V8Jx


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .