Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு பழைய கருவிப்பெட்டியை ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்டியில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று இருப்பதை ரிக் தற்போது கண்டுபிடித்துள்ளார். அந்த கடிதம் இர்வின் பிளெம்மிங் என்ற ஒரு இராணுவ அதிகாரியால் எழுதப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வந்துள்ள அக்கடிதத்தில், “கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன். விரைவில் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது. இதையடுத்து தற்போது இந்த கடிதத்தை உரியவரிடம் சேர்க்க ரிக் ட்ரோஜனோவ்ஸ் முயற்சித்து வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago