2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

532 நாட்கள் விடுமுறை எடுத்த ஜோ பைடன்

Freelancer   / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் களமிறங்கினாலும், பின்னர் வயது முதிர்வு காரணமாக ஒதுங்கி கொண்டார்.

இந்நிலையில், 81 வயதாகும் அவர், கடந்த நான்கு வருடங்களில் எடுத்த விடுப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். அதாவது, அவர் பதவிக்காலத்தில் 40 சதவீத நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார். இது ஐந்து ஆண்டுகளில் சராசரி அமெரிக்க தொழிலாளி ஒருவருக்கு கிடைப்பதை விட அதிகம்.

தொழிலாளிக்கு ஆண்டுக்கு சராசரியாக 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இந்த கணக்குப்படி, ஜோ பைடன் 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார்.

இத்தனை நாட்கள் ஜோ பைடன் விடுமுறை எடுத்ததை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலை, உள்நாட்டில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது சரியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X