2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

50 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளது.

பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை. 

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் செல்கின்றது. 

அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூலை 29 அன்று, பூமி அதன் குறுகிய நாள் சாதனையை முறியடித்தது. 1960 க்கு பின் மிகவும் குறுகிய காலத்தில் முடிந்த மாதமாக அது கருதப்பட்டது. 

இந்த நிலையில் ஜூலை 29, பூமி மிகவும் குறுகிய நாளை பதிவு செய்தது. இதன் மூலம் பூமி வேகமாக சுழல்வது மீண்டும் தெரியவந்துள்ளது. 

2020 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று பூமி மிகவும் வேகமாக சுழன்று, 24 மணி நேரத்திற்குள் ஒரு நாளை நிறைவு செய்தது. அதாவது 1.47 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே பூமி தனது சுழற்சியை நிறைவு செய்தது. 

இந்த நிலையில் நேற்று பூமி 1.59 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பூமி இதைவிட வேகமாக சுழன்று இந்த சாதனையை முறியடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.  (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X