2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

32 பற்களுடன் பிறந்த குழந்தை (காணொளி)

Mayu   / 2024 ஜூலை 21 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது பல் இருக்காது. குழந்தை வளரும் போது பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு 32 பற்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகும். பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் 32 பற்கள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அரிய நோய் பாதிப்பு காரணமாக பிறக்கும் போதே 32 பற்கள் இருந்ததாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே வீடியோவை பகிர்ந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

பிறக்கும் போதே இவ்வாறு பற்களுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரச்சினையை நேட்டல் டீத் என்று சொல்வார்கள். நீண்ட காலமாக இந்த நேட்டல் பற்கள் பிரச்சனையுடன் பிறந்த குழந்தைகளுக்கு 4 முன் பற்கள், தாடையில் 4 முதல் 6 பற்கள் மற்றும் பலவற்றின் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X