Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 மே 27 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பப்புவா நியூ கினியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியாவில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன.
வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அதில் சிக்கினர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. நிலச்சரிவில் 100 பேர் பலியானதாக அந்த நாட்டின் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.
நேற்று மண்ணில் புதைந்த நிலையில் 5 உடல்கள் மற்றும் இறந்த ஒருவரின் ஒரு காலும் மீட்கப்பட்டன. இந்த நிலையில், எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் புதையுண்டன.
மீட்புப் பணிகள் தீவிரம் அடைந்த நிலையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமனோர் உயிருடன் புதைந்து இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பேரழிவு ஏற்பட்ட எங்கா மாகாணத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதனிடையே, ஐநா அமைப்புடன் தொடர்புடைய இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹன் அக்டோபரக் நேற்று கூறுகையில், ‘670 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேடான பகுதியில் இருந்து மண் தொடர்ந்து சரிந்து வருகிறது. இடிபாடுகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் பகுதியில் மீட்பு பணிகளை தொடர்வது சிரமமாக உள்ளது’’ என்றார்.
அதேசமயம், சில இடங்களில் மீட்பு பணிகளுக்கான கருவிகள் இன்னும் வரவில்லை என்ற நிலையில், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
51 minute ago
56 minute ago