Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 11 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திரே மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் மந்திரிகள் 3 பேர் மிகவும் கீழ்தரமாக விமர்சித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, அவதூறு கருத்து தெரிவித்த மந்திரிகள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அப்போது சீனாவின் புஜியான் மாகாணத்தில் நடைபெற்ற மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு பேசிய முகமது முய்சு, “சீனா மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு” என கூறியதுடன், தங்கள் நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீன அரசுக்கு கோரிக்கையும் வைத்தார்.
இந் நிலையில் புதன்கிழமை (10) அவர் பீஜிங்கில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை விரிவான கூட்டாண்மைக்கு உயர்த்துவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான 20 முக்கிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
54 minute ago