Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 19 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாகவும், 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்ததாகவும், பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
பங்களாதேஷில், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் போராட்டதால், அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை இராஜினமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் வங்கதேச நீதிமன்றம், ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது. ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த 15 ஆண்டு பதவி காலத்தில், மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்தார் எனவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஷேக் ஷசீனாவை ஒப்படைக்க கோரி இந்தியாவிடம் முகமது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் இடைக்கால அரசு வேண்டுகோள் விடுத்தது. இதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை இந்தியா நீட்டித்தது. ஆனால் அவரது பாஸ்போர்ட்டை பங்களாதேஷ் இடைக்கால அரசு ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில் அவாமி லீக் கட்சியின் முகநூல் பக்கத்தில் ஷேக் ஷசீனா வெளியிட்ட ஆடியோ தகவலில் கூறியிருப்பதாவது,
“கடந்தாண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி நானும், எனது சகோதரி ரெஹானாவும் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தோம். எங்களை கொல்ல அரசியல் எதிரிகள் சதி செய்தனர். நான் இதற்கு முன் பல தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளேன். இறைவன் அருளால் நான் உயிருடன் உள்ளேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமென்று இறைவன் விரும்புகிறார்” என, ஷேக் ஹசீனா உருக்கமாக கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
52 minute ago
56 minute ago