Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் திகதி ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினார், அங்கு சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனார். அத்துடன், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 240 பேரை அங்கிருந்து பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காசாமீது தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருகிறது. இது தவிர, தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவிலுள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாலும் அங்கு சுகாதாரக் கட்டமைப்புகள் நிலைகுலைந்துவிட்டதாலும் மிகப் பெரிய மனிதப் பேரழிவை காசா எதிர் நோக்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த மாத பிற்பகுதியில் 7 நாள்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தங்களது சிறைகளில் இருந்த பலஸ்தீன கைதிகள் சிலரை இஸ்ரேலும், தங்களால் இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸும் பரிமாறிக்கொண்டன.
எனினும், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு காசாவில் தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.
இந் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததாக காசா தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 8,000 குழந்தைகள், 6,200 பெண்களும் அடங்குவர்.
இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டத்தில், உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக 153 நாடுகளும், எதிராக அமெரிக்கா உட்பட 10 நாடுகளும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago