2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

19இல் பூமியை வந்தடைவார் சுனிதா?

Freelancer   / 2025 மார்ச் 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்,  நாசா விஞ்ஞானிகளுடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (16) காலை சென்றடைந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஆய்வு பணிக்காக சென்ற பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட  டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரக ரொக்கெட் ஒன்று சனிக்கிழமை (15) அதிகாலை புறப்பட்டு சென்றது. 

இந்த ரொக்கெட் சனிக்கிழமை (15) இரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், நாசா குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (16) காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளனர். இதனால், நீண்டகாலம் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நடவடிக்கையை ஐ.எஸ்.எஸ். குழுவினர் மற்றும் விண்கல குழுவினர் கண்காணித்தனர். சுனிதா மற்றும் வில்மோர் இருவருக்கும் இது இறுதி கட்ட விண்வெளி திட்டம் என கூறப்படுகிறது. வருகிற 19ஆம் திகதி வில்மோர் மற்றும் வில்லயம்ஸ் இருவரும் அந்த விண்கலத்தில் புறப்பட்டு பூமிக்கு திரும்புவார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X