2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

15 நாட்களில் புதிய போப்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக போப் ஆண்டவர் ஒருவர் இறந்தாலோ, புதிய போப் ஆண்டவர் நியமிக்கப்பட இருந்தாலோ ரகசிய தேர்தல் செயல்முறை நடத்தப்படும் என கூறப்படுகிறது. 

அதாவது போப் ஆண்டவர் பதவி காலியானது முதல் 15-20 நாட்களுக்குள், 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து, வாரிசைத் தீர்மானிப்பதற்கான ரகசியத் தேர்தல் செயல்முறையான போப்பாண்டவர் மாநாட்டில் பங்கேற்பார்கள். 

70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட கார்டினல்கள் உள்ளனர், ஆனால் சுமார் 120 பேர் மட்டுமே கார்டினல் வாக்காளர்கள்.

வத்திக்கானில் நடைபெறும் தேர்தலின்போது, ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வரை பல சுற்றுகளில் வாக்களிப்பார்கள்.

போப் ஒருவரைத் தேர்ந்தெடுக்காத ஒவ்வொரு சுற்று வாக்களிப்புக்கும், தேவாலயத்திலிருந்து கருப்பு புகை வெளியேறும். ஒரு கட்டத்தில் வெள்ளை புகை வெளியேறும் பட்சத்தில் புதிய போப்பின் தேர்வை குறிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .