2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

13 வயது மகனுக்கு தாய் செய்த கொடூரம்

Freelancer   / 2022 ஜனவரி 08 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சாரா பீம் என்ற 41 வயது ஆசிரியை, கடந்த 3 ஆம் திகதி அங்குள்ள ‘டிரைவ்-த்ரூ’ கொரோனா பரிசோதனை மையத்துக்கு சென்றுள்ளார். 

இத்தகைய மையங்களில் வாகனங்களில் இருந்தபடியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அந்த வகையில் சாரா பீம், கொரோனா பரிசோதனை செய்வதற்காக காரில் சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள், காரின் பின்புறத்தில் இருந்து சத்தம் வருவதை கவனித்துள்ளனர். 

இதைப்பற்றி சாராவிடம் கேட்ட போது, காரின் பின்புறத்தில்  தனது 13 வயது மகனை பூட்டி வைத்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதார ஊழியர்கள், உடனடியாக அவரது மகனை வெளியே விடுமாறு கூறியுள்ளனர். 

அதற்கு, தனது மகனுக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், தனக்கு கொரோனா ஏற்படாமல் பாதுகாக்கவே அவனை காரின் பின்புறத்தில் வைத்து பூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு பரிசோதனை மூலம் தனது மகனுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அவரது மகனை வெளியே விடாவிட்டால் பரிசோதனை செய்ய மாட்டோம் எனக் கூறிய சுகாதார ஊழியர்கள், உடனடியாக இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பரிசோதனை மையத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், சிறுவனை மீட்டு அவனது தாய் சாராவை கைது செய்தனர். 

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய வழக்கில் சாரா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X